நாடு முழுவதிலும் அரிசிக்கு தட்டுப்பாடு
நாடு முழுவதிலும் அரிசி வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசியின் விலையை உயர்த்தியதினை தொடர்ந்து நாட்டின் சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களும் விலைகளை உயர்த்தியுள்ளனர்.
மேலும், நாட்டில் கீரி சம்பா தவிர்ந்த ஏனைய அரசி வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
பெரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசியின் விலையை குறைப்பதாக கூறிய போதிலும் சந்தையில் ஒரு கிலோ கிராம் அரிசியின் விலை 210 ரூபா முதல் 230 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரிசி உற்பத்தி செலவு
இதனால் சிறிய அரிசி ஆலை உரிமையாளர்களும் சிவப்பரிசி, நாடு மற்றும் சம்பா அரிசி வகைகளை பாரிய அரிசி வியாபாரிகள் விற்பனை செய்யும் விலைக்கு விற்பனை செய்கின்றனர்.
மின்கட்டணங்கள், டீசலின் விலை போன்றன குறைந்துள்ள நிலையிலும் அரிசி உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதாக கூறி அரிசி விலையை அதிகரித்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்னதாக ஒரு கிலோ கிராம் எடையுடைய கீரி சம்பா அரிசி 400 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்டது.

தற்பொழுது ஒரு கிலோ கிராம் கீரி சம்பா 250 முதல் 270 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
கீரி சம்பா விலை உயர்வினால் அதிகளவு விவசாயிகள் கீரி சம்பாவை விளைவித்தனர் எனவும் ஏனைய அரிசி வகைகள் விளைவிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் நாட்டில் தொடர்ந்தும் அரிசியின் விலை உயர்வாக காணப்படுகின்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan
புனிதா சீரியலை தொடர்ந்து சன் டிவியில் முடிவுக்கு வரப்போகும் இன்னொரு சீரியல்... வருத்தத்தில் ரசிகர்கள் Cineulagam