பலஸ்தீனர்களின் அனுமதியில்லாமல் இஸ்ரேலில் எந்த விமானமும் பறக்கமுடியாது!!
மேற்குக் கரையில் 'பலஸ்தீனம்' என்கின்ற தனி நாடு உருவாகுவதற்கு இஸ்ரேல் பல்வேறு தடைகளைப் போட்டு வருவதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், மேற்குக் கரையின் அமைவிடம் ஒரு முக்கியமான காரணம்.
மேற்குக் கரை உயரமான மலையின் மீதுதான் அமையப்பெற்றிருக்கின்றது.
மேற்குக் கரையில் பலஸ்தீனம் என்கின்ற தனிநாடு அமைந்துவிட்டால், பலஸ்தீனம் என்பது உயரத்தில் இருக்கும். அதனை அண்டிய இஸ்ரேல் கொஞ்சம் கீழே இருக்கும்.
அத்தோடு, இஸ்ரேலின் ஒரே ஒரு சர்வதேச விமான நிலையம் இருக்கின்ற 'டெல்அவிவ் நகரம்' என்பது மேற்குக் கரையில் இருந்து வெறும் 9 மைல்கள் தொலைவில் இருக்கின்றது.
மேற்குக்கரை ஒரு தனிநாடாக மாறி, அங்கு பலமான ஒரு இராணுவக் கட்டமைப்பு அமையப்பெற்றுவிட்டால், இஸ்ரேலின் ஒடுங்கலான டெல்அவிவ் பிரதேசம் இலுகுவாகவே பலஸ்தீனதேசத்தின் கண்காணிப்பு எல்லைக்கு வந்துவிடும்.
அது மட்டுமல்ல, பலஸ்தீனத்தின் சூட்டு எல்லைக்குள்ளும் டெல்அவீவ் மிக இலகுவாக வந்துவிடும்.
பலஸ்தீனர்களின் மேற்குக் கரை தொடர்பாக இஸ்ரேலுக்கு இருந்துவருகின்ற அச்சம் பற்றியும், அதனை எதிர்கொள்வதற்கு இஸ்ரேல் கையாண்டுவருகின்ற சதிகள் பற்றியும் ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:

பதினாறாவது மே பதினெட்டு 19 மணி நேரம் முன்

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan
