பொது இடங்களில் சுகாதார அட்டை நடைமுறை கட்டாயமாகுமா? இராணுவ தளபதி வெளியிட்ட தகவல்
பொது இடங்களுக்கு செல்லும் போது கோவிட் தடுப்பூசி அட்டை கட்டாயமாக்குவது தொடர்பில் கலந்துரையாடல் மட்டத்திலேயே உள்ளதென இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டில் மக்கள் தொகையில் நூற்றுக்கு 6 வீதமானோருக்கு எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் இரண்டாவது தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.
எனவே பொது இடங்களுக்கு செல்லும் போது தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவது தொடர்பில் எதிர்வரும் நாட்களில் இடம்பெறும் கோவிட் தடுப்பு செயலணி கூட்டத்தில் கலந்துரையாடப்படும் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளில் இந்த திட்டம் வெற்றிகரமாக உள்ளதென தகவல் வெளியாகி உள்ளது. எப்படியிருப்பினும் சிலர் இரண்டாவது தடுப்பூசிகளை இன்னமும் செலுத்திக் கொள்ளாமையினால் உடனடியாக இந்த நடவடிக்கைக்கு செல்ல முடியவில்லை என இராணுவ தளபதி சுற்றிக்காட்டியுள்ளார்.
இந்த விடயங்கள் அனைத்தும் ஆராய்ந்து எதிர்வரும் நாட்களில் இது தொடர்பான இறுதி முடிவு அறிவிக்கப்படும் என இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.
