மகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களினால் நாடாளுமன்ற அமர்வுகளை தவிர்த்தாரா ரோஹித
மகள் மற்றும் மருமகனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் காரணமாக நேற்றைய தினம்(23) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வுகளை நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தவிர்த்தாரா என அரசியல் வட்டாரத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக வாகனமொன்றை இறக்குமதி செய்தாக ரோஹிதவின் மகள் மற்றும் மருமகன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் குறித்த இருவரையும் கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. எனினும் இருவரும் தலைமறைவாகியுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்ற அமர்வு
இந்த நிலையில் நேற்றைய தினம் நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வுகளில் ரோஹித் அபேகுணவர்தன பங்கேற்கவில்லை.
இந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் புதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது சட்டவிரோதமாக ஒருங்கிணைக்கப்பட்ட குறித்த வாகனத்தை ரோஹிதவின் புதல்வியிடம் பெற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
இவ்வாறான ஓர் பின்னணியில் ரோஹிதவும் தலைமறைவாகியுள்ளாரா என அரசியல் வட்டாரத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





இந்திய விமானப்படைக்கு போர் விமானங்கள் தேவை - அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை News Lankasri
