உலகமே எதிர்பார்த்த ஈரானின் புதிய உச்ச தலைவரின் முதல் அறிக்கை! தன்னை முன்னிலைப்படுத்த தவறிய மொஜ்தபா கமேனி
நேற்றையதினம்(12) ஈரானின் புதிய உச்ச தலைவராக தெரிவுசெய்யப்பட்ட மொஜ்தபா கமேனியின் முதல் அறிக்கை வெளியாகியது.
அனைவரும் எதிர்ப்பார்த்திருந்த அவரின் உரை வெளியானாலும், அவர் உயிருடன் உள்ளாரா இல்லையா என்று கேள்விகள் கேட்கப்படும் நிலையில் அவர் பொது வெளியில் தோன்றாமலும், குரல் பதிவில்லாமலும் அறிக்கையை ஒருவர் வாசித்தமையானது தற்போது பாரிய சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது.
அமெரிக்காவிற்கு எதிரான அழுத்தத்தை அதிகரிக்க ஹார்முஸ் நீரிணை தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். மத்திய கிழக்கு நாடுகள் மீதான தாக்குதல் தொடரும். ஈரான் ஒருபோதும் பின்வாங்காது.
முழு பலத்துடன் எதிர்க்கும். மறைந்த எனது தந்தை அயதுல்லா அலி கமேனிக்கு மட்டுமல்லாது, போரில் உயிர் இழந்த ஒவ்வொரு குடிமகனுக்காகவும் பழிவாங்குவோம். எதிரியிடமிருந்து ஈரான் இழப்பீடு பெறும்.
அவர்கள் மறுத்தால், அவர்களின் சொத்துக்களை ஈரான் பறிமுதல் செய்யும் அல்லது அதே அளவிற்கு அவற்றை அழிக்கும் என்றே குறிப்பிட்டார்.
மொஜ்தபா கமேனியின் இந்த அறிக்கையை ஆராய்ந்தால் சம்பிராதயத்திற்கு கூட அமைதி பற்றி பேசவில்லை. உலக தலைவராக பேசாது இஸ்லாமிய புரட்சிக்கர அமைப்பின் தளபதி போல தான் பேசியிருந்தார்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி..
ஈரான் USS ஆபிரகாம் லிங்கனைத் தாக்கியதா..! குற்றச்சாட்டை மறுக்கும் அமெரிக்கா - அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் போர்களம்
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 5 மணி நேரம் முன்
சன் டிவி சீரியல்களுக்கு டப் கொடுக்கும் விஜய்யின் அய்யனார் துணை சீரியல்... டிஆர்பி விவரம் இதோ Cineulagam
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri