இலங்கைக் கடற்பரப்பில் ஈரான் கப்பல்கள் நங்கூரமிட்டுள்ளனவா!
அரசாங்கம் விளக்கம் இலங்கையின் கடற்பரப்பில் ஈரானிய கப்பல்கள் நங்கூரமிட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டிருந்தது.
இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்கு வெளியே 20 ஈரானிய எரிபொருள் தாங்கிக் கப்பல்கள் நங்கூரமிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு அருகிலுள்ள கடல் பகுதியில் இந்தக் கப்பல்கள் நங்கூரமிட்டுள்ளதாக வெளியான செய்திகளுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சு இந்த விளக்கத்தை அளித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் துஷார ரொட்ரிகோ இது குறித்து தெளிவுபடுத்தியுள்ளார். இந்தக் கப்பல்கள் தொடர்பில் இலங்கைக்கு எவ்விதப் பொறுப்போ அல்லது கடப்பாடோ கிடையாது என தெரிவித்துள்ளார்.
எனினும:, குறித்த கப்பல்கள் தொடர்பான நிலைமையை இலங்கை அரசாங்கம் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றது என அவர் முலும் தெரிவித்துள்ளார்.