ஆபத்தான சிவப்பு எல்லையைத் தாண்டிய ட்ரம்ப்! பதிலடி கொடுக்க தயாராகும் ஈரான்..
ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனியைக் கொன்றதன் மூலம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் "மிகவும் ஆபத்தான சிவப்பு எல்லையைத்" தாண்டிவிட்டார் என்று ஈரானிய வெளியுறவுத் துறை துணை அமைச்சர் சயீத் கதேப்சாதே தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பதிலளிப்பதைத் தவிர வேறு வழியில்லை..
கமேனியின் கொலைக்கு உலகம் முழுவதும் உள்ள பல ஷியா ஆதரவாளர்கள் எதிர்வினையாற்றுவார்கள் என்றும் கதேப்சாதே கூறினார்.
நிச்சயமாக, ஒரு மதக் கண்ணோட்டத்தில், அவர் ஒரு சிறந்த மதத் தலைவராக இருந்தார், எனவே பிராந்தியத்திலும் உலகெங்கிலும் உள்ள பல ஷியா ஆதரவாளர்கள் அவரின் கொலைக்கு எதிர்வினையாற்றப் போகிறார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் ஜனாதிபதி டிரம்ப் மிகவும் ஆபத்தான சிவப்பு கோட்டைக் கடந்துவிட்டதால் இது மிகவும் வெளிப்படையானது என்று தெரிவித்த கதேப்சாதே "எங்களுக்கு பதிலளிப்பதைத் தவிர வேறு வழியில்லை," என்றும் உறுதிபட தெரிவித்துள்ளார்.