இருவார கால போர் நிறுத்தம்! ஈரான் - அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தை ஆரம்பம்
ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியுள்ளதாக ஈரானிய அரச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தைகள் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் இன்று (11.4.2026) ஆரம்பமாகியுள்ளது.
எனினும், இந்தப் பேச்சுவார்த்தைகள் நேரடியாக நடைபெறுகின்றனவா அல்லது இடைத்தரகர்கள் ஊடாக முன்னெடுக்கப்படுகின்றனவா என்பது குறித்து இதுவரை தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.
பேச்சுவார்த்தை
ஒருவேளை இந்தப் பேச்சுவார்த்தைகள் நேரடியானவை என்பது உறுதிப்படுத்தப்பட்டால், 1979 ஆம் ஆண்டு ஈரானிய இஸ்லாமியக் குடியரசு உருவானதன் பின்னர், ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே மிக உயர்மட்டத்தில் இடம்பெறும் முதலாவது நேரடிப் பேச்சுவார்த்தையாக இது அமையும்.

தற்போது நிலவும் பலவீனமான போர்நிறுத்தச் சூழலுக்கு மத்தியில் இந்தப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியுள்ள போதிலும், அதன் நோக்கம் மற்றும் எல்லை குறித்து இரு தரப்பிலிருந்தும் இதுவரை எவ்வித உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தல்களும் வழங்கப்படவில்லை.
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam