தெஹ்ரான் மீதான இஸ்ரேலின் தீவிர தாக்குதல்! ஈரானின் மற்றுமொரு முக்கிய அதிகாரியும் பலி
ஈரானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் கமல் கராஸி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த ஏப்ரல் 1 திகதி அன்று அமெரிக்க-இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஏற்பட்ட காயங்களால் வியாழக்கிழமை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச உறவுகளுக்கான மூலோபாயக்குழு
81 வயதான கராஸி, வெளியுறவு அமைச்சகத்தின் ஒரு பகுதியான சர்வதேச உறவுகளுக்கான மூலோபாயக் குழுவின் தலைவராகப் பணியாற்றி வந்துள்ளார்.

தெஹ்ரானின் குடியிருப்பு பகுதிகளின் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரான கமல் கராசியின் வீடும் தகர்க்கப்பட்டது.
இதில் அவரது மனைவி உயிரிழந்த நிலையில், கராசி காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (09) இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பெப்ரவரி 28 அன்று அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களுடன் மத்திய கிழக்கு போர் தொடங்கியதிலிருந்து நடந்த தாக்குதல்களில், ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் பல உயர்மட்ட இராணுவ, அரசியல் பிரமுகர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.