இருமுறை ஏமாற்றிய அமெரிக்கா! நிபந்தனைகள் நிறைவேறும் வரை கடுமையான தாக்குதல்கள் - ஈரான் சபதம்
ஈரான் எப்போது விரும்புகிறதோ, அதன் நிபந்தனைகள் எப்போது நிறைவேற்றப்படுகிறதோ, அப்போது போரை முடிவுக்குக் கொண்டுவரும் என்று மூத்த ஈரான் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின் விவரங்களை அறிந்துள்ள ஒரு மூத்த ஈரான் அதிகாரி, ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடுமையான தாக்குதல்கள்
அமெரிக்காவிற்கு எதிரான தனது தற்காப்பைத் தொடர ஈரான் விரும்புகிறது, மேலும் தனது நிபந்தனைகள் நிறைவேறும் வரை "கடுமையான தாக்குதல்களை" நடத்துவதாக அது சபதம் செய்துள்ளது.

அமெரிக்கா முன்வைத்த போர்நிறுத்தத் திட்டத்தை ஈரான் நிராகரித்துள்ளது. அமெரிக்காவின் முன்மொழிவை “அதிகப்படியானது” என்று விமர்சித்தார்.
மேலும், கடந்த காலத்தில் நடந்த பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா ஈரானை இருமுறை ஏமாற்றியதாகவும், அந்த இரு சந்தர்ப்பங்களிலும் உண்மையான பேச்சுவார்த்தை நோக்கம் அமெரிக்காவுக்கு இல்லை என்றும் அந்த அதிகாரி குற்றம் சாட்டியுள்ளார்.