ஈரான் ஏவிய அதிதீவிர சக்தி கொண்ட முதல் Kheibar ஏவுகணை..!
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC), தனது மூன்றாம் - தலைமுறையின் கெய்பர் ஷெகான் எனப்படும் அதிதீவிர சக்தி கொண்ட ஏவுகணையை முதல் முறையாக ஏவியுள்ளது.
கெய்பர் ஷெகான் ஏவுகணை என்பது, “fortress breaker” அதாவது "கோட்டை உடைக்கும்" பாலிஸ்டிக் ஏவுகணை ஆகும்.
குறித்த ஏவுகணையை இஸ்ரேலிய பிரதேசத்தில் நேரடித் தாக்குதலுக்குப் பயன்படுத்தியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை உறுதிப்படுத்தியுள்ளது.
பதில் தாக்குதல்
இது, ஈரானின் முக்கிய அணுசக்தி நிலையங்களை குறிவைத்து நேற்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்கு நேரடியாக பதிலளிக்கும் முகமாக ஏவப்பட்டுள்ளது.
மேலும், இஸ்லாமிய புரட்சிகர காவல்படை வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த ஏவுகணை ஓபரேஷன் ட்ரூ ப்ரோமிஸ் - IIIஇன் 20ஆவது அலையின் கீழ் ஏவப்பட்டுள்ளது.
And finally Kheibar is knocking at the Zionists' doors...
— Daily Iran Military (@IRIran_Military) June 22, 2025
The Kheibar missile was fired towards Israel for the first time. pic.twitter.com/Ml65yGJZdg
அத்துடன், இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையம், உயிரியல் ஆராய்ச்சி வசதி மற்றும் மாற்று கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு தளங்கள் உட்பட இஸ்ரேலில் பல உயர் முன்னுரிமை இடங்களை குறிவைத்து, திட மற்றும் திரவ எரிபொருளில் இயங்கும் 40 பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டதாக ஈரான் அறிவித்துள்ளது.
அதிக திறன்
கடந்த 2022ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டு இதுவரை நேரடியாக போரில் பயன்படுத்தப்படாத கெய்பர் ஷெகான் ஏவுகணையின் முதல் செயல்பாட்டு வரிசைப்படுத்தல் இது என்று ஈரான் தெரிவித்துள்ளது.
இந்த ஏவுகணை 1,450 கிலோமீட்டர் வரை தாக்கும் வரம்பைக் கொண்டுள்ளதுடன் இஸ்ரேலின் பெரும்பகுதியை தாக்கும் அளவு மிக அதிக தூரத்திற்குள் ஊடுறுவும் திறன் கொண்டது.
மேலும், கெய்பர் ஷெகான் ஏவுகணையில், ஒரு திட - உந்துசக்தி, ஒற்றை - நிலை இயந்திரம் மற்றும் வான் - பாதுகாப்பு அமைப்புகளைத் தவிர்ப்பதற்காக முனைய கட்டத்தில் அதிவேக தப்பிக்கும் செயல்களைச் செய்யும் திறன் கொண்ட ட்ரை - கோனிக் செய்யக்கூடிய போர்முனை (MARV) ஆகியவற்றை காணப்படுகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழரும் தமிழக இனச் சகோதரத்துவ அரசியலும் 10 நிமிடங்கள் முன்

6 பதுங்கு குழி வெடிகுண்டுகள், 30 Tomahawk ஏவுகணைகள்... ஈரான் அணுசக்தி தளங்களை உருக்குலைத்த ட்ரம்ப் News Lankasri

ட்ரம்பால் பற்றியெரியப் போகும் மத்திய கிழக்கு.... ஈரானின் பதிலடிக்கு தயாராகும் அமெரிக்க இராணுவம் News Lankasri
