ஈரானில் வெடித்த போராட்டத்தில் இதுவரை 50பேர் வரை பலி: சமூகவலைத்தள பக்கங்கள் முடக்கம்

Iran
By Jenitha Sep 24, 2022 10:51 AM GMT
Report

ஹிஜாப் சரியாக அணியாததால் பொலிஸார் தாக்கியதில் இளம்பெண் மாஷா அமினி உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து ஈரானில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

ஹிஜாப்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த பெண்கள் தங்கள் ஹிஜாப்பை கழற்றி எறிந்தும், ஹிஜாப்பை தீ வைத்து எரித்தும், தங்கள் தலைமுடியை வெட்டியும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சமூகவலைத்தள பக்கங்கள் முடக்கம் 

ஈரானில் வெடித்த போராட்டத்தில் இதுவரை 50பேர் வரை பலி: சமூகவலைத்தள பக்கங்கள் முடக்கம் | Iran Hijabs Protest News Technology

அதேவேளை, போராட்டக்காரர்களை ஒடுக்க ஈரான் அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

போராட்டம் பரவுவதை தடுக்க இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத்தள பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளன.

மேலும், போராட்டத்தில் ஈடுபடும் பெண்கள் உள்ளிட்டோர் மீது பொலிஸார், பாதுகாப்பு படையினர் கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், ஈரானில் ஹிஜாப்பிற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது பொலிஸார், பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளதாக ஈரான் மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

போராட்டம் நாட்டின் பிற பகுதிகளுக்கும் பரவி வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. 

மாஷா அமினி

ஈரானில் வெடித்த போராட்டத்தில் இதுவரை 50பேர் வரை பலி: சமூகவலைத்தள பக்கங்கள் முடக்கம் | Iran Hijabs Protest News Technology

இஸ்லாமிய மதத்தை பின்பற்றும் நாடு ஈரான். இந்நாட்டில் பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அந்நாட்டின் குர்திஸ்தான் மாகாணம் சஹிஸ் நகரை சேர்ந்த 22 வயதான மாஷா அமினி என்ற இளம்பெண் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி கடந்த 13ஆம் திகதி தெஹ்ரான் நகர பொலிஸார் கடுமையாக தாக்கியுள்ளனர்.

ஹிஜாப்பால் தலைபகுதியை முழுமையாக மறைக்கவில்லை என மாஷா அமினி மீது பொலிஸார் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த மாஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கோமா நிலைக்கு சென்ற மாஷாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் கடந்த 17ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், இச் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாஷா அமினியின் சொந்த ஊரான சஹிஸ் நகரில் தொடங்கிய போராட்டம் மெல்ல மெல்ல நாட்டின் பிற பகுதிகளிலும் பரவத்தொடங்கியது. 

ஹிஜாப் அணியாத இளம் பெண்ணை அடித்து கொன்ற பொலிஸார் 



மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US