ஹிஜாப் போராட்டங்களால் ஈரானில் பதற்றமான சூழல்
ஹிஜாப் போராட்டங்களால் ஈரானில் பதற்றமான சூழலுக்கு மத்தியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 5பேர் கொல்லப்பட்டனர்.
இந்த போராட்டங்களின் போது பயங்கரவாதத்தைத் தூண்டும் விதமாக ஆயுதங்களை பயன்படுத்தியதாகக் கூறி, இரண்டாவதாக ஒருவருக்கு ஈரான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், ஈரானின் தென்மேற்கு நகரமான இசே நகரில் உள்ள பஜாரில் மர்மநபர்கள் சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது 5 பேர் கொல்லப்பட்டனர்.
பொலிஸார் மீது கற்களால் தாக்குதல்
10 பேர் காயமடைந்தததாகவும் அரசு தொலைக்காட்சி செய்தி தெரிவித்துள்ளது.
இந்த துப்பாக்கிச் சூடு தாக்குதல் ஈரானில் நடைபெற்று வரும், நாடு தழுவிய போராட்டங்களுடன் தொடர்புடையதா என்பது குறித்து உடனடியாகத் தெரியவில்லை.
முன்னதாக நேற்று பல்வேறு பகுதிகளில் ஹிஜாபிற்கு எதிரான போராட்டக்காரர்கள் ஈரான் அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.
பொலிஸார் மீது கற்களால் தாக்குதல் நடத்தினர்.
போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam

சிறுவயதில் முத்துவிற்கு என்ன ஆனது, மனோஜ் என்ன செய்தார்... சிறகடிக்க ஆசை சீரியல் ஷாக்கிங் புரொமோ... Cineulagam
