இறக்காமம் பிரதேச சபைத்தவிசாளர் ஆளும் அரசின் அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்த முட்டுக்கட்டை
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள இறக்காமம் பிரதேச சபைத் தவிசாளர் ஆளும் அரசின் அபிவிருத்தி திட்டங்களை இறக்காமம் பிரதேசத்தில் நடைமுறைப்படுத்த முட்டுக் கட்டை போடுவதாக தேசிய காங்கிரஸ் கட்சியில் இறக்காமம் பிரதேச அமைப்பாளர் சட்டத்தரணி கே.எல்.சமீம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று(28) வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அரச நிறுவனமான பிரதேச சபை ஒன்றின் தவிசாளர் அரசின் அபிவிருத்தி திட்டங்களுக்கு தடை விதிப்பதன் மூலம் மீண்டும் பிரதேச சட்டத்தின் பிரிவு 185ஐ மீறுகிறார்.
ஏற்கனவே முறையற்ற நிதிக் கையாள்கை தொடர்பான தவிசாளருக்கெதிரான எனது முறைப்பாடு கிழக்கு ஆளுநரிடம் உள்ள நிலையில் இரண்டாவது முறைப்பாடும் தயார் நிலையில் உள்ளது.
இந்த வகையில் தலைவர் அதாஉல்லா அவர்களினால் இறக்காமம் பிரதேசத்தில் கிராமிய
பாதைகள் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டுள்ள 7 வீதிகளுக்குமான அனுமதியை
இறக்காமம் பிரதேச செயலாளர் கடந்த 28.11.2021ல் கோரியிருந்த போதிலும் பிரதேச
சபை தவிசாளர் அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக இது வரை அனுமதி மறுத்து
வருவதையும் எனது மனுவில் சுட்டிக் காட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் விவகாரத்தில் யாரும் மத்தியஸ்தம் செய்ய தேவை இல்லை - டிரம்ப் கோரிக்கையை நிராகரித்த மோடி News Lankasri

இனியா செய்த விஷயம்.. ஷாக் ஆன வில்லன்! நம்பர் 1 ட்ரெண்டிங்கில் பாக்கியலட்சுமி அடுத்த வார ப்ரோமோ Cineulagam
