ஆப்பிள் நிறுவன பொருட்களின் பாவனைக்கு தடை: மஸ்க் விடுத்துள்ள எச்சரிக்கை

Apple Elon Musk World
By Dharu Jun 11, 2024 06:56 PM GMT
Report

ஆப்பிள் நிறுவன பொருட்களின் பாவனைக்கு தனது நிறுவனத்திற்குள் தடை விதிக்கப்படும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். ஓபன்ஏஐ தொழில்நுட்பத்தை இயங்குதளங்கள் அளவில் ஆப்பிள் நிறுவனம் ஒருங்கிணைத்தால், இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்த எக்ஸ் தள பதிவில் அவர், "ஆப்பிள் நிறுவனம் ஓபன்ஏஐ தொழில்நுட்பத்தை இயக்க முறைமை(Operating system) அளவில் ஒருங்கிணைத்தால், எனது நிறுவன வளாகங்களில் ஆப்பிள் சாதனங்களுக்கு தடை விதிக்கப்படும்.

இது ஏற்றுக் கொள்ளவே முடியாத பாதுகாப்பு விதிமீறல். என் நிறுவனத்திற்குள் வருபவர்கள் தங்களது ஆப்பிள் சாதனங்களை வாசலிலேயே ஒப்படைக்க வேண்டும்.

கனடாவில் கோர விபத்தில் ஈழத்தமிழ் இளைஞன் பலி

கனடாவில் கோர விபத்தில் ஈழத்தமிழ் இளைஞன் பலி


எலான் மஸ்க்கின் கருத்து

அவை அங்கு பாதுகாப்பாக வைக்கப்படும்," என்று குறிப்பிட்டுள்ளார். எலான் மஸ்க்-இன் இந்த கருத்து தொடர்பாக ஓபன்ஏஐ மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் சார்பில் இதுவரை எந்த பதிலும் வழங்கப்படவில்லை.

ஆப்பிள் நிறுவன பொருட்களின் பாவனைக்கு தடை: மஸ்க் விடுத்துள்ள எச்சரிக்கை | Ios New Update Version Apple Exposures Elon Musk

முன்னதாக ஆப்பிள் நிறுவனத்தின் வருடாந்த மென்பொருள் அபிவிருத்தி நிகழ்வில் (WWDC 2024) ஏ.ஐ. சார்ந்த பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.

இதில் ஆப்பிள் நிறுவன சேவைகள் மற்றும் சாதனங்களில் ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் புகுத்தப்படும் என்றும் ஓபன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி சேவை தனது சாதனங்களில் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஆப்பிள் அறிவிப்புகளுக்கு கண்டனம் தெரிவித்த எலான் மஸ்க், "தங்களுக்கென சொந்தமாக ஏ.ஐ. உருவாக்க முடியாத ஆப்பிள் நிறுவனம், ஓபன்ஏஐ மூலம் உங்களது பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை உறுதிப்படுத்தி விடும் என்பது அபத்தமாக இருக்கிறது.

உங்களின் தரவுகளை ஓபன்ஏ.ஐ.-இடம் கொடுத்துவிட்டால் அதற்கு என்னவாகும் என்பது பற்றி ஆப்பிள் நிறுவனத்துக்கு எந்த அக்கறையும் இல்லை. அவர்கள் வாடிக்கையாளர்களை வைத்து வியாபாரம் செய்கின்றார்கள் ," என்று தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பெருமளவான கேரளக் கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணத்தில் பெருமளவான கேரளக் கஞ்சா மீட்பு

போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்ட ஹமாஸ்: கேள்விக்குறியாகியுள்ள இஸ்ரேலின் நிலை

போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்ட ஹமாஸ்: கேள்விக்குறியாகியுள்ள இஸ்ரேலின் நிலை

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US