நிலந்த ஜயவர்தன தொடர்பான விசாரணை அறிக்கை
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரும் முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான நிலந்த ஜயவர்தன தொடர்பான விசாரணை அறிக்கையை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடமிருந்து கோருவதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் தயாராகி வருகிறது.
இந்த முறையான கோரிக்கை எதிர்வரும் நாட்களில் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அனுப்பப்படும் என அந்தத் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அடுத்த கட்ட நடவடிக்கை
குறித்த விசாரணை அறிக்கையை முழுமையாக மதிப்பாய்வு செய்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து குற்றச்சாட்டுகளிலும் நிலந்த ஜயவர்தன குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேசிய பொலிஸ் ஆணைக்குழு உடனடியாக அவரை பொலிஸ் சேவையிலிருந்து நீக்குவதற்கு அண்மையில் நடவடிக்கை எடுத்திருந்தது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
        
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        