முன்னாள் அமைச்சர் ஒருவரின் மோசடி குறித்து விரைவில் விசாரணை
கடந்த 2019ஆம் வருடம் உயிரிழந்த முன்னாள் அமைச்சர் சாலிந்த திஸாநாயக்கவின் காணிமோசடியொன்று குறித்த விவகாரம் விரைவில் விசாரணைக்குட்படுத்தப்படவுள்ளது.
முன்னாள் அமைச்சர் சாலிந்த திஸாநாயக்க, சந்திரிக்கா ஆட்சியின்போது, காணி அபிவிருத்தி பிரதியமைச்சராக செயற்பட்டிருந்தார்.
அக்காலகட்டத்தில் அவர் தன் மனைவி தலைவியாக இருந்த விவசாயிகள் கூட்டுறவு அமைப்பொன்றுக்கு அரசாங்கத்தின் 76 ஏக்கர் காணியை நீண்ட கால குத்தகைக்கு வழங்கியிருந்தார்.
குறித்த காணி அரசாங்கத்தின் ஐந்து கோடி ரூபா செலவில் சீரமைக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவ்வாறு நீண்ட கால குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்தது.
குத்தகைத் தொகை
எனினும், குத்தகைக்கு வழங்கப்பட்டது தொடக்கம் இதுவரை குறித்த விவசாயக் கூட்டுறவு அமைப்பின் மூலம் அரசாங்கத்துக்கு ஒரு சதமேனும் குத்தகைத் தொகையாக செலுத்தப்படவில்லை.
இது தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடிகள் தடுப்பு ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்து விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக நீர்ப்பாசன பிரதியமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த காணி விவகாரத்துடன் தொடர்புடைய சாலிந்தவின் மனைவி மஞ்சுளா திஸாநாயக்க, கடந்த கோட்டாபய தலைமையிலான ஆட்சியின் போது குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam
