கடவுச்சீட்டு நெருக்கடிக்கு காரணமான சிரேஸ்ட அதிகாரிகள் மீது விசாரணை
தற்போதைய கடவுச்சீட்டு நெருக்கடிக்கு காரணமான சிரேஸ்ட அதிகாரிகள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் சங்கம், இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.
கடவுச்சீட்டு வழங்கலின் உண்மை நிலைமை, தேசிய நிர்வாகம் மற்றும் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரல் ஆகிய இரண்டையும் பாதிக்கும் என்ற விடயங்களை பொறுப்புள்ள அமைச்சருக்கு வெளிப்படுத்துவதில், இந்த அதிகாரிகள் தவறியுள்ளனர்.
புதிய அரசாங்கத்திற்கு சவால்
அத்துடன், உயர் அதிகாரிகள் தவறான தகவல்களை வழங்கியதாகவும் தொழிற்சங்கம் குற்றம் கூறியுள்ளது. இதுவே இன்று புதிய அரசாங்கத்திற்கு சவால்களை உருவாக்கியுள்ளது என்றும் இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடவுச்சீட்டு வழங்கலில் தொடர்ந்தும் வரிசை முறையை தவிர்க்க முடியாதுள்ளமையை அடுத்தே சங்கத்தின் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 8 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
