சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'இன்வெஸ்ட் ஸ்ரீலங்கா' நிகழ்வு நிறைவு
இந்தியாவின் சென்னையில் முதல் தடவையாக கொழும்பு பங்குச் சந்தை ஏற்பாடு செய்த இன்வெஸ்ட் ஸ்ரீலங்கா நிகழ்வு முடிவடைந்துள்ளது.
இலங்கை பங்குச் சந்தையில் வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்ததாக கொழும்பு பங்குச்சந்தையின் மேலாளர் ரஜீவ பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்தியா, இன்று இலங்கைக்கான முதலிட சுற்றுலா மூலச் சந்தையாக இருக்கும் அதே வேளையில், இரு நாடுகளுக்கும் இடையில் நெருக்கமான ஒத்துழைப்பையும் பேணுகிறது.
நேரடி முதலீடுகள்
இதன் காரணமாக, இந்தியாவில் இருந்தும் அதிகளவான அந்நிய நேரடி முதலீடுகள் வரவுள்ளன.
சென்னையிலும் வணிகம் செழித்து வருகிறது, தமிழகமும் இலங்கையுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ளது, இதன் காரணமாகவே முதல் நிகழ்வை சென்னையில் நடத்தியதாக ரஜீவ பண்டார குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் மும்பையில் நாளை (11.08.2023) இரண்டாவது நிகழ்வு இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

நடிகர் பிரதீப் ரங்கநாதனுக்கு போட்டியா? ஹீரோவாக களமிறங்கும் இளம் இயக்குநர்.. யார் தெரியுமா Cineulagam

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri
