நடமாடும் தடுப்பூசி சேவை! தொலைபேசி இலக்கம் அறிமுகம்

Covid-19 People Kilinochchi Covid vaccine
By Sudaron Jul 28, 2021 11:39 AM GMT
Report

தற்பொழுது பாதைகள் திறக்கப்பட்டு மக்கள் நடமாடுவதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள். மீண்டும் கிளிநொச்சி மாவட்டத்தில் கோவிட் தொற்று அதிகரித்துள்ளதென்பதை மக்கள் அறிந்து தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளுங்கள் எனக் கிளிநொச்சி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் சரவணபவன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் மாவட்டத்தில் தற்பொழுது செலுத்தப்படும் கோவிட் தடுப்பூசி தொடர்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று கிளிநொச்சி மாவட்டத்தில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் 50ஆயிரம் சினோபாம் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டோம். மக்கள், அரச ஊழியர்கள் என இதில் ஆர்வத்துடன் ஈடுபட்டு தடுப்பூசியைப் பெற்றுக்கொள்கின்றார்கள்.


30 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் கடைகளில் பணியாற்றுவோர், சந்தைகளில் பணியாற்றுவோர், போக்குவரத்தில் ஈடுபடுவோர் முக்கியமாக முச்சக்கரவண்டி சாரதிகள் 30 வயதுக்குக் குறைவாக இருந்தாலும் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளலாம்.

கிளிநொச்சி மாவட்டத்திற்கு அருகில் உள்ள மாவட்ட மக்கள் குறிப்பாக முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட மக்களும் அருகிலுள்ள தடுப்பூசி ஏற்றும் நிலையத்தில் வந்து தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளலாம்.

பயணம் செய்ய முடியாது வீடுகளில் இருப்போர், நோய்வாய்ப்பட்டிருப்போருக்கு நடமாடும் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளோம். 0212285933 எனும் இலக்கத்திற்குக் காலை 9 மணியிலிருந்து மாலை 4 மணி வரைக்கும் தொடர்புகொண்டு பதிவுகளை மேற்கொண்டால் வீடுகளிற்கு வந்து தடுப்பூசிகளைச் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே வீடுகளிற்கும், முதியோர் இல்லங்களிற்கும் சென்று தடுப்பூசிகளை ஏற்றும் திட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதுவரைக்கும் 4 இடங்களில் தடுப்பூசி ஏற்றப்பட்டிருக்கின்றது. தடுப்பூசி முக்கியமாகப் பாதுகாப்பானது. இலங்கையில் உள்ள அநேகமான மாவட்டங்களில் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

மிகவும் பக்க விளைவு குறைந்த பாதுகாப்பான தடுப்பூசியாகும். இம்முறை வட கிழக்கு மாகாணத்தில் உள்ள அநேகமான மாவட்டங்களிற்குத் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

மக்கள் அச்சமின்றி இந்த பாதுகாப்பான தடுப்பூசியைப் பெற்று மாவட்டத்தில் கோவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு மக்கள் முன்வர வேண்டும். முக்கியமாக தற்பொழுது பாதைகள் திறக்கப்பட்டு மக்கள் நடமாடுவதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

மீண்டும் கிளிநொச்சி மாவட்டத்தில் கோவிட் தொற்று அதிகரித்துள்ளதென்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். நோய் பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது என ஒருபோதும் நினைக்கக்கூடாது. நேற்றையதினம் கூட கிளிநொச்சி மாவட்டத்தில் 19 நோயாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றார்கள் .

ஆகவே நோய்த் தொற்று மீண்டும் அதிகரிக்கின்றபடியால் எல்லோரும் முன்வந்து கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள நிலையங்களில் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளவும். கிளிநொச்சி மாவட்டத்தில் ஏறக்குறைய 9 நிலையங்களில் தடுப்பூசி வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம், வட்டக்கச்சி மகாவித்தியாலயம், அக்கராயன் மகாவித்தியாலயம், தர்மபுரம் மகாவித்தியாலயம், பளை, பூநகரி, வேரவில், முழுங்காவில் வைத்தியசாலைகளிலும் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

மக்கள் காலத்தை வீணடிக்காது இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன். 50ஆயிரம் தடுப்பூசிகளை நாங்கள் பெற்றுக்கொண்டுள்ளோம்.

அவற்றைக் காலக்கிரமத்தில் போட்டு முடிக்க வேண்டிய தேவை இருக்கின்றது. எனவே ஏராளமான மக்கள் வந்து தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள் என்பதைப் புரிந்துகொண்டு இன்றுமுதல் தொடர்ச்சியாக அவ்வந்த நிலையங்களை மேற்கொள்ளப்படும் நிலையில் அதனைப் பெற்றுக்கொள்ளவும். தொழிலின் நிமிர்த்தம் மற்றும் இங்கு வெவ்வேறு காரணங்களுடன் தங்கியிருப்பவர்களிற்கும் நாங்கள் தடுப்பூசிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றோம்.

அவர்கள் தங்களை அடையாளப்படுத்தி தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

முக்கியமாக வீடுகளில் இருப்பவர்கள், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களாகவோ அல்லது வெவ்வேறு நோய்த்தாக்கங்களால் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்கள், படுக்கையில் இருப்பவர்கள் குறிப்பிடப்பட்ட தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு பதிவினை மேற்கொண்டால் அவர்களிற்கு நடமாடும் தடுப்பூசி வழங்கல் வேலைத்திட்டத்தின் கீழ் வீடுகளிற்கே சென்று செலுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இன்றைய ஊடக சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்

கரம்பொன் மேற்கு, Milton, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
நன்றி நவிலல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, சூரிச், Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், கொழும்பு, India

24 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், London, United Kingdom

20 Mar, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

24 Mar, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, முறிகண்டி, Toronto, Canada

17 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France

24 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சென்னை, India, Toronto, Canada

03 Apr, 2025
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US