மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து நிறுத்தப்பட்டது!
இலங்கையில் கோவிட் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சற்று முன் (இன்று நள்ளிரவு முதல்) இடை நிறுத்தப்பட்டுள்ளது.
கோவிட் பரவல் அதிகரித்த நிலையிலேயே, மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இது குறித்த அறிவிப்பு இன்று பகல் வெளியாகியிருந்தது. ஜனாதிபதியுடனான சந்திப்பில் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், மாகாண எல்லைகளில் பொலிஸாருடன், முப்படையினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
எவ்வாறாயினும், சுகாதாரம், துறைமுகம், ஆடைத் தொழிற்சாலை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோருக்கு, கடமை நிமிர்த்தம் மாகாண எல்லையை கடப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.