திருகோணமலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு விளக்கமறியல் நீடிப்பு
திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 05 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருகோணமலை நீதிமன்ற நீதவான் பயாஸ் ரசாக் முன்னிலையில் இன்று (08) சந்தேக நபரை முன்னிலைப்படுத்திய போதே இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர் மோட்டார் சைக்கிளில் விற்பனைக்காக கஞ்சா போதைப் பொருளை மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்வதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது குறித்த சந்தேக நபரிடமிருந்து கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam