திருகோணமலை கடற்பரப்பில் நங்கூரமிடும் சர்வதேச கப்பல்கள்!மீனவர்கள் விசனம்

Srilanka Trincomale
By Independent Writer Nov 27, 2021 09:11 PM GMT
Report

திருகோணமலை கடற்பரப்பில் நங்கூரமிடும் சர்வதேச கப்பல்களினால் சிறு மீன்பிடி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை - சாம்பல்தீவு சல்லி பிரதேச மீனவர்களே இவ்வாறு பாதிப்படைவதாக தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை கடற்பரப்பில் நங்கூரமிடப்படும் சர்வதேச கப்பல்கள் குறிப்பிட்ட ஒரு பிரதேசத்தில் நங்கூரமிடாமல் கடற்பரப்பில் விரும்பியவாறு நங்கூரமிடுவதினால் சிறு மீன்பிடி தொழிலாளிகள் மீன் பிடிக்க முடியாமல் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

மேலும் தாம் மீன்பிடிப்பதற்காக கடலுக்கு செல்லும் பொது நங்கூரமிடப்பட்டிருக்கும் கப்பலை அண்டிய கடற்பரப்பில் மீன்பிடிக்க விடாமல் விரட்டுவதாகவும் அதையும் மீறி மீன்பிடியில் ஈடுபட்டால் இலங்கை கடற்படைக்கு அறிவித்து அவர்கள் மூலம் மீன் பிடிக்க தடை விதிக்கப்படுவதாக குற்றம் சுமத்துகின்றனர்.

மேலும் இவ்வாறு வருகை தரும் சர்வதேச கப்பல்கள் ஒரு நேரகாலம் இல்லாமல் பயணிப்பதற்கான எல்லை ஒன்று இல்லாமல் தாம் மீன் பிடிக்கும் பிரதேச எல்லையினுடாக பயணிப்பதினால் தாம் மீன் பிடிப்பதற்காக வலைகள் போட்டதன் பின்னர் இந்த சர்வதேச சரக்கு கப்பல்கள் பயணம் செய்வதினால் தமது மீன்பிடி வலைகள் வெட்டுப்பட்டு நாசம் அடைவதாக குற்றம் சுமத்துகின்றனர்.

மேலும் இவ்வாறு திருகோணமலைக்கு வரும் சர்வதேச கப்பல்கள் திருகோணமலை கடற்பரப்பில் விரும்பிய இடத்தில் நக்க்கூரமிடுவதினாலும் இவ்வாறு மீன்பிடி வலைகள் நாசம் அடைவதாகவும் தெரிவித்த சல்லி மீனவர்கள் இவ்வாறு வருகை தரும் கப்பல்களில் பல கழிவுப்பொருட்கள் மற்றும் பாதுகாப்பு வெலிக்கம்பிகள் போன்றவை கடலில் வீசப்படுவதினால் பல லட்சம் பெறுமதியான வலைகள் நாசம் அடைவதாகவும், இவ்வாறு சல்லி கடற்பரப்பில் தமது வலைகளில் சிக்குண்ட பாதுகாப்பு வேலி கம்பிகள் பல மணிநேர போராட்டத்திற்கு பின்னர் தாம் கரைக்கு இழுத்து வந்ததாகவும், சில சந்தர்ப்பங்களில் தாம் மீன்பிடிக்க பயன்படுத்தும் வலையினை கடலிலே விட்டுச்செல்வதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.

திருகோணமலை துறைமுகத்தை அண்மித்த கடற்பரப்பில் நங்கூரமிடுவதிற்கு பல கடற்பரப்புக்கள் இருந்தபோதிலும் இவ்வாறு சிறு மீன்பிடி தொழிலாளர்கள் மீன்பிடிக்கும் கடற்பரப்பில் இவ்வாறு நங்கூரமிட்டு தமது வாழ்வாதாரத்தினை அழிப்பது மனவேதனை அடைவதாக சல்லி சாம்பல்தீவு மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் கடந்த காலங்களில் திருகோணமலை கடற்பரப்பில் இலங்கை போக்குவரத்து பழைய வாகனங்களை மீன் இனப்பெருக்கத்திற்கு என கடலில் போடப்பட்டது. அவ்வாறு போடப்பட்ட வாகனங்களினாலும் நீரோட்ட காலப்பகுதியில் பல அசௌகரியங்களுக்குள்ளாவதாகவும், இதனை ஒரு சவாலாக தமது வாழ்வாதாரத்தினை முன்னெடுத்து வருகின்ற நிலையில்  சர்வதேச கப்பல்கள் நங்கூரமிடுவதினால் தாம் பெரும் நட்டத்தினை எதிர்நோக்குவதாக சல்லி சாம்பல்தீவு மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்விடயம் தொடர்பில் தாம் மீனவ சங்கங்கள் ஊடாக உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்திய போதிலும் எமது ஜீவனோபாயத்தில் எவரும் அக்கறை கொள்ளவில்லையெனவும், நாட்டில் விவசாயத்தினை பின்தள்ளி அரிசி இறக்குமதி செய்யப்படுவதுபோல் மீன்பிடியினையும் இல்லாதொழித்து மீன் இறக்குமதி செய்யும் சூழ்நிலை உருவாக வழிவகுக்க வேண்டாம் என சல்லி சம்புத்தீவு மீனவர்கள் கேட்டுக்கொண்டதுடன்,  மீன்பிடி பிரச்சினைக்கு ஜனாதிபதி, கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மற்றும் உரிய அதிகாரிகள் தீர்வினை பெற்றுத்தருமாறு மீனவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.


GalleryGalleryGallery
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US