ஹோர்மூஸ் நீரிணையை திறக்க தீவிர நகர்வுகளில் சர்வதேசங்கள்
ஹோர்மூஸ் நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பில் 35 நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
ஈரானுடனான இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் போரைத் தொடர்ந்து, ஹோர்மூஸ் நீரிணையை மூடியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.
உலகின் எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு ஹோர்மீஸ் நீரிணை வழியாகவே கொண்டு செல்லப்படுவதால், நீரிணை மூடல் உலகம் முழுவதும் எரிபொருள் பற்றாக்குறை அபாயத்தை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், ஹோர்மூஸ் நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பில் 35 நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
எண்ணெய்க்கப்பல்கள்
என்றாலும், ஹோர்மூஸ் நீரிணையில் எண்ணெய்க்கப்பல்கள் போக்குவரத்துக்கு பாதுகாப்பளிப்பது தொடர்பிலான எந்த நடவடிக்கையும், போர் முடிந்த பிறகே மேற்கொள்ளப்பட இருப்பதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

அதாவது, போர் முடிந்தாலும், ஹோர்மூஸ் நீரிணை வழியாக எண்ணெய்க்கப்பல்கள் சென்றுவருவது விடயத்தில் ஈரான் பிரச்சினையை உருவாக்கலாம் என்ற கருத்து நிலவிவருகிறது.
அதாவது, ஹோர்மூஸ் நீரிணையிலிருந்து கண்ணிவெடிகளை அகற்றுதல், கப்பல் போக்குவரத்துக்கு பாதுகாப்பளித்தல் போன்ற விடயங்களில் உதவ இந்த நாடுகள் திட்டமிட்டுவருகின்றன.
இதற்கிடையில், பிரான்ஸ் கடற்படை தலைவரான அட்மிரல் நிக்கோலஸ் வாஜோர், பிரித்தானியா, ஜேர்மனி, இத்தாலி, இந்தியா மற்றும் ஜப்பான் முதலான 12 நட்புநாடுகளின் கடற்படைத் தளபதிகளிடம் கடல் பாதுகாப்பு தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ரோஹினியை பழிவாங்க படிச்ச அறிவாளி மனோஜ் போட்ட பிளான், சிக்குவாரா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
தனக்கு தெரியாமல் செந்தில் செய்த காரியம், செம ஷாக்கில் மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
இதுவரை யூத் திரைப்படம் தமிழ்நாட்டிலும், உலகளவிலும் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
எனது நகரத்திற்குள் அமெரிக்க அதிகாரிகளுக்கு அனுமதி இல்லை: கிண்டலுக்குள்ளான கனேடிய மேயர் News Lankasri