இலங்கையில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் சர்வதேச நிபுணர்
இலங்கையில் பாலியல் வன்கொடுமை என்பது, அடிக்கடி பதிவாகும் குற்றமாக மாறியுள்ளது.
2024 ஆம் ஆண்டில் மட்டும் இலங்கையில் 2,252 பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களும், 130,000 வீட்டு குடும்ப வன்முறை சம்பவங்களும்பதிவாகியுள்ளன.
இது கொரோனாவுக்கு முந்திய ஆண்டுகளை விட குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதியை உறுதி செய்யும் செயற்பாடுகள்
இந்தநிலையில், இலங்கையில், குறித்த குற்றங்களின் தீவிரத்தை கட்டுப்படுத்த கனேடிய அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும், ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டுத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் பாலின அடிப்படையிலான வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நீதியை உறுதி செய்யும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த திட்டத்தின் ஊடாக மரபணு பகுப்பாய்வில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட நிபுணர் ஒருவர் 4 மாத காலத்துக்கு இலங்கையில் அதிகாரிகளுடன் இணைந்து செயற்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 22 மணி நேரம் முன்

சிறகடிக்க ஆசை வெற்றி வசந்த் மனைவிக்கு என்ன ஆச்சு.. கதறி அழும் பொன்னி சீரியல் வைஷ்ணவி.. வைரல் வீடியோ Cineulagam
