பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு எதிரான வழக்கிற்கு இடைக்கால தடை
பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான ரவி செனவிரட்னவிற்கு எதிரான வழக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023ம் ஆண்டு குடி போதையில் வாகனத்தைச் செலுத்தியதாகவும் மற்றும் விபத்தினை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் ரவி செனவிரட்னவிற்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது.
கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் விசாரிக்கப்பட்டு வரும் வழக்கு விசாரணைகளை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு உடப்டுத்தப்பட்டு வரும் வழக்கினை வேறும் நீதிமன்றில் விசாரணை செய்யுமாறு ரவி செனவிரட்ன மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவினை பரிசீலனை செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம் குறித்த வழக்கு விசாரணைகளுக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான மயாதுன்ன கொரேயா மற்றும் மஹேன் வீரமன் ஆகியோரினால் பரிசீலிக்கப்பட்டது.



