மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பொருளாதார சுமைகள்! ஆளுநர் வெளியிட்டுள்ள தகவல்
மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பொருளாதார சுமைகள், இந்த வருடம் ஓரளவு தணிக்கப்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
கண்டியில் உள்ள தலதா மாளிகைக்கு இன்று (01) விஜயம் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை ஆளுநர் தெரிவித்துள்ளார்.
வட்டி வீதங்கள்
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
2023 ஆம் ஆண்டில் வட்டி வீதங்கள் மற்றும் பணவீக்கத்தை குறைப்பதில் அதிகம் கவனம் செலுத்தப்படும்.இந்த வருடம் ஓரளவு தணிக்கப்படும்.
இந்த வருடத்தில் பணவீக்கத்தையும் வட்டி வீதங்களையும் முகாமை செய்து நாட்டின் பொருளாதாரத்தை வழமைக்கு கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே திட்டத்திற்கமைய, பணவீக்கத்தைக் குறைக்க மேலதிகமாக வட்டி வீதங்கள் குறையும் பட்சத்தில், மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் மேலும் குறையும் என்றும் தெரிவித்துள்ளார்.