செவ்வந்தியின் கைதுக்கு பின் புலனாய்வுதுறைக்கு அதிர்ச்சி கொடுத்த செயல்...
செவ்வந்தியின் கைது நாடளாவிய ரீதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், சந்தேகநபர்களின் கைது பின்னணி வெளியானவிதம் தற்போது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கைது நடவடிக்கையின் போது யார் கைது செய்யப்பட்டார்கள்,எப்படி கைது செய்யப்பட்டார்கள், கைதின் போது நடந்த தோற்றப்பாடுகள் கைது செய்தவர்கள் இலங்கைக்கு அழைத்து வந்த பின்னர்தான் அரசத்தரப்போ அல்லது பொலிஸ் தரப்போ வெளியிட வேண்டும்.
செவ்வந்தியின் கைது
எனினும் செவ்வந்தியின் கைது விடயத்தில் அதற்கு முன்னரே இந்த விடயங்கள் வெளிப்பட்டமையானது பலத்த சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது.
செவ்வந்தியின் கைது விடயமானது பிரபல அரசியல்வாதியொருவரால் ஊடகங்களுக்கு கசிந்தமையானது குற்றவியல் அதிகாரிகளுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பொலிஸாரின் உள்ளகச்செயற்பாடுகளில் பெரும் குழப்பம் நிலவுவதாகவும் கூறப்படுகின்றது.
அரசஅதிகாரிகள் மீதும், அரசஉயர்அதிகாரிகள். அமைச்சின் செயலாளர்கள் அரச இராணுவ மற்றும் புலனாய்வு கட்டமைப்புகளில் இருக்ககூடியவர்கள் தொடர்பில் ஜனாதிபதியும் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
மேலும், செவ்வந்தியின் கைது வெளியில் செல்லாமல் இரகசியம் பேணப்பட வேண்டுமென பொலிஸ்மா அதிபரால் அறிவுறுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.





வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam
