திங்கட்கிழமை முதல் முழுமையாக திறக்கப்படும் பாடசாலைகள் - பெற்றோர்களுக்கு விசேட அறிவிப்பு
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கையை வழமை போன்று முன்னெடுக்க கல்வி அமைச்சுக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில், திங்கட்கிழமை முதல் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்புவதால் மாணவர்களை பாதுகாப்பாக அனுப்புமாறு பெற்றோருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடக குழு மற்றும் மத்தியக் குழுவின் உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் இன்று இதனை தெரிவித்துள்ளார்.
தற்போது நாடளாவிய ரீதியில் பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் பகுதியளவில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், நீண்டதொரு இடைவெளிக்கு பின்னர் மீண்டும் பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் வழமை போன்று ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் 1 ரூபாய் நோட்டு ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படவில்லை... பலரும் அறிந்திராத தகவல் News Lankasri
Bigg Boss: இரண்டாவது எவிக்ஷனில் இன்று வெளியேறுவது யார்? எவிக்ஷன் கார்டை காட்டிய விஜய் சேதுபதி Manithan