பொலிஸ் மா அதிபரின் சேவை நீடிப்பு இன்றுடன் நிறைவு
பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவுக்கு இரண்டாவது முறையாக வழங்கப்பட்ட 3 மாத கால பதவி நீடிப்பானது இன்றுடன்(09.10.2023) நிறைவடையவுள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த ஜூன் மாதம் 09 ஆம் திகதி முதல் இந்த சேவை நீடிப்பை வழங்கியிருந்தார்.
2020 நவம்பரில் இலங்கையின் 35வது பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்ட சி. டி. விக்கிரமரத்ன, தனது பதவியில் இருந்து மார்ச் 25ஆம் திகதி ஓய்வுபெறவிருந்த நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவருக்கு 3மாத கால பதவி நீடிப்பை வழங்கியிருந்தார்.
இரண்டாவது சேவை நீட்டிப்பு
முதல் சேவை நீட்டிப்பு நிறைவடைந்ததையடுத்து, கடந்த ஜூன் 09ஆம் திகதியின் பின் முதல் மூன்று மாத காலத்திற்கான இரண்டாவது சேவை நீட்டிப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில், பொலிஸ் மா அதிபரின் சேவை முடிவடைந்த காரணத்தினால் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு மற்றுமொரு அதிகாரி நியமிக்கப்படுவாரா, அல்லது சி.டி. விக்கிரமரத்னவுக்கே சேவை நீடிப்பு வழங்கப்படுமா என்பது தொடர்பில் இதுவரையில் தீர்மானம் எடுக்கப்படவில்லை என பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
