பொதுக்கூட்டங்களை கட்டுப்படுத்த குற்றவியல் நடைமுறைச்சட்டத்தை பயன்படுத்த வலியுறுத்து
நீதித்துறை அதிகாரிகள் மற்றும் சட்டத்தரணிகளுக்காக, அண்மையில் நீதித்துறை சேவை ஆணைக்குழுவினால் நடத்தப்பட்ட கூட்டத்தில், நடப்பு கோவிட் பரவல் நிலைமையில், பொதுக்கூட்டங்களைக் கட்டுப்படுத்த குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 98 மற்றும் 106 பிரிவுகளைப் பயன்படுத்த, அவர்கள் வலியுறுத்தியதாக நம்பப்படுகிறது.
நீதித்துறை வாழ்க்கையில் முதல் முறையாக நீதித்துறை சேவை ஆணைக்குழுக்கூட்டத்தில் பங்கேற்றதாக ஊடகம் ஒன்றிடம் கூறியுள்ள, நீதிவான் ஒருவர், நீதிபதிகள், நீதித்தன்மையை பயன்படுத்தாது, அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும் என்ற எண்ணம் இந்த கூட்டத்தின் போது ஏற்பட்டதென்று குறிப்பிட்டுள்ளார்.
இது நீதிபதிகள், தமது உத்தியோகபூர்வ கடமைகளை நிறைவேற்றும் போது இது ஒரு நுட்பமான அழுத்தமாக கருதப்படலாம் என்று அவர் தெரிவித்துள்ளார் .
கோவிட் தொற்று நோயின் பின்னணியில் “நீதித்துறை நடவடிக்கைகள் தொடர்பான விடயங்கள்” என்ற தலைப்பில் கடந்த வெள்ளிக்கிழமை, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையில், நீதிச்சேவைகள் ஆணைக்குழுவினரின் பங்கேற்புடன் நீதிபதிகள் மற்றும் நீதிவான்களுக்கான இணைய அமர்வொன்று இடம்பெற்றது.
கூட்டம் தொடங்கிய போது, கோவிட் பரவுவதில், பெரியக் கூட்டத்தின் பாதிப்புக்கள் குறித்து நீதிபதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
எனவே காவல்துறையினரின் கோரிக்கைகளை ஏற்றுக்கூட்டங்களைக் கட்டுப்படுத்த உத்தரவிட வேண்டும் என்பது தெளிவாக இருந்தது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.