மகிந்தவின் காலத்தில் தமிழருக்கு இழைக்கப்பட்ட அநீதி! கொந்தளிக்கும் பொதுமகன்(Video)
மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்திலே தமிழ் மக்களின் சொந்த பூர்வீக காணிகளை அபகரித்து சொகுசான ஜனாதிபதி மாளிகை கட்டப்பட்டது என பொது மகன் ஒருவர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருக்கும் ஜனாதிபதி மாளிகையை தனியார் ஒருவருக்கு வழங்கும் செயற்பாடு தொடர்பில் பொதுமக்களின் அபிப்பிராயங்கள் தொடர்பில் எமது குழுவினரால் ஆய்வு செய்யப்பட்டது.
இதில், மேலும் ஒரு சிலர் கருத்து வெளியிடுகையில்,
உண்மையிலேயே இந்த செயற்பாட்டினை ஏற்க முடியாது. கடந்த காலங்களிலே வடக்கு மாகாண சபைக்கு ஜனாதிபதி மாளிகையை வழங்குமாறு உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தமையும் தெரியும்.
இதற்கு அண்மையிலேயே உலக புகழ் பெற்ற தலமான நகுலேச்சரம் காணப்படுகிற வேளை மக்கள் காணியை அபகரித்து சொகுசு மாளிகை கட்டப்பட்டது பிழையான விடயம்.
அந்த இடத்தினை தனியார் கல்வி நிலையத்திற்கு அரசாங்கம் வழங்கியுள்ளமையை ஏற்றுக்கொள்ள முடியாது.காணி உரிமையாளர்களுக்கு நட்ட ஈடும் வழங்கப்படவில்லை என தெரிவித்துள்னர்.

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
