கிளிநொச்சியில் விவசாயி ஒருவருக்கு இழைக்கப்பட்ட அநீதி
கிளிநொச்சியில் விவசாயி ஒருவருக்கு சொந்தமான நீர் பங்கு, சட்டத்திற்கு முரணான முறையில் இரகசியமாக விற்பனை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.
ஒன்பது ஏக்கர் சிறுபோக நீர் பங்கு ஒன்றே மூன்று இலட்சத்து ஆறுபதாயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
குறித்த நீர்ப்பங்கு கிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழான புலிங்க தேவன் முறிப்பு கமக்கார அமைப்பின் தலைவரால் கமக்கார அமைப்புக்கு விற்பனைசெய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட விவசாயினால் நேற்று (12-06-2023) கம நல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மோசடியின் பின்னணியில் அதிகாரிகள்
குறித்த பகுதியில் சுமார் 40 வருடங்களுக்கு மேலாக பயிர்செய்கை மேற்கொண்டு வந்த விவசாயியின் பங்கு உரிமை சிறுபோகத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான மோசடிகளின் பின்னணியில் சில அதிகாரிகளும் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதுமட்டுமன்றி குறித்த பிரதேசத்தில் இருந்து விவசாயிகளிடம் நிறுத்தப்பட்ட சுமார் 43 வரையான சிறுபோக நீர் பங்குகள் கமநல சேவை நிலையங்களின் எந்த ஒரு அறிவுறுத்தல்களும் இன்றி தன்னிச்சையான விதத்தில் சின்ன காடு கமக்கார அமைப்புக்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றது.
இவ்வாறான செயற்பாடுகளே பல்வேறு மோசடிகளுக்கு வழி வகுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 3 நாட்கள் முன்

எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பிரபலம், அவரால் ஏற்படும் பரபரப்பு... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

சூப்பர் சிங்கர் போட்டியாளருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் ஆண்டனி... சந்தோஷத்தில் போட்டியாளர், வீடியோ Cineulagam
