முல்லைத்தீவில் பாடசாலை மாணவியை வைத்து தவறான தொழில்! குடும்ப பெண் கைது
புதுக்குடியிருப்பு பகுதியில் சிறுமி ஒருவரை வைத்து தவறான தொழில் நடாத்தி வந்த குற்றச்சாட்டில் குடும்ப பெண் ஒருவரும் அவரது கணவரும் நேற்றையதினம்(12) கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியில் கிளிநொச்சியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவரை மூன்று மாதங்களாக அழைத்து வீட்டில் வைத்து தவறான தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
பின்னர் குறித்த சிறுமி கிளிநொச்சியில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார். சிறுமியின் உடலில் ஏற்பட்ட மாற்றத்தை அவதானித்த பெற்றோர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் சிறுமி துன்புறுத்தலுக்கு உள்ளாகியிருந்தமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, சிறுமியிடம் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி வைத்தியசாலை பொலிஸார் விசாரணை செய்தபோது சிறுமிக்கும் கிளிநொச்சியில் ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகள்
அந்த பெண், சிறுமிக்கு பண ஆசையினை காட்டியதையடுத்து, புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியில் உள்ள பெண் வீட்டில் சிறுமி மூன்று மாதங்கள் தங்கியிருந்துள்ளார்.
குறித்த பெண், சிறுமியினை வைத்து தவறான தொழில் செய்து பணத்தினை சிறுமிக்கு கொடுக்க மறுத்ததனை தொடர்ந்தே சிறுமி வீட்டை விட்டு வெளியேறி சென்றுள்ளார்.

அதனை தொடர்ந்து புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்படதனை தொடர்ந்து புதுக்குடியிருப்பு குடும்ப பெண்ணும் கணவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுகுடியிருப்பு மற்றும் கிளிநொச்சி பொலிஸார் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மீண்டும் பிளாக்பஸ்டர் இயக்குநருடன் இணையும் அஜித்.. இதற்காகதான் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள் Cineulagam
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri