இளைஞர்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள தகவல்
18 வயது பூர்த்தியடைந்த 100,000 இளைஞர்கள் குழு வாக்காளர் இடாப்பில் பதிவு செய்யப்படவில்லை என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
2023 வாக்காளர் பட்டியல் தயாரிப்பின் போது இந்த விடயம் தெரியவந்துள்ளது.
அதன்படி, 2023 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் இளம் வாக்காளர்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிப்பு
இதேவேளை, ஜனாதிபதி தேர்தலை 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்திலும், அதனை தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலை 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலும், மாகாண சபை தேர்தலை மார்ச் மாதத்திலும் நடாத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கான உத்தியோகப்பூர்வ அறிவிப்புகள் கூடிய விரைவில் வெளியிடப்பட உள்ளதுடன் பரந்துபட்ட அரசியல் கூட்டணியில் கட்சி சார்பற்ற பொது வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை களமிரக்குவதற்கான தீர்மானம் ஐக்கிய தேசிய கட்சியின் நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam
