இரண்டாவது கோவிட் தடுப்பூசி தொடர்பில் ஆய்வில் வெளிவந்துள்ள தகவல்
இரண்டாவது கோவிட் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்ட 75 வயதிற்கும் மேற்பட்டவர்களில் 87 சதவீதமானவர்கள் கோவிட் தொற்றினால் ஏற்படும் ஆபத்தான நிலைக்கு செல்லாமல் தடுத்து நிறுத்தப்படுகின்றமை ஆய்வில் தெரியவந்துள்ளது.
பிரான்சில் கோவிட் தொற்றின் மூன்றாவது அலை பரவினாலும், தற்போது அங்கு கோவிட் பரவல் குறைந்து வருகின்றது. இதனால் அங்கிருக்கும் மக்கள் அனைவரம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
நாட்டில் கோவிட் பரவல் குறைந்ததற்கு முக்கிய காரணம் தடுப்பூசி தான், எனவே தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்று கூறப்படுகின்றது.
இந்நிலையில், நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கோவிட் தடுப்பூசிகள், 75 வயதிற்கு மேற்பட்டவர்களில், 87 சதவீதமானவர்களை, கோவிட் தொற்றினால் ஏற்படும் ஆபத்தான நிலைக்கு செல்லாமல் தடுத்து நிறுத்துவது ஆய்வில் தெரியவந்துள்ளது.
இரண்டாவது தடுப்பூசி போடப்பட்ட ஏழு நாட்களிற்குப் பின்னர், இவர்களிற்கான கோவிட் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி விடுகின்றது.
இதனால், இரண்டு தடுப்பூசியும் போடப்பட்ட 75 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு கோவிட் தொற்று ஏற்பட்டால், 10-ல் 9 பேர் என்ற விகிதத்தில் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய தேவை ஏற்படவில்லை என்பதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.





சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
