தனிமைப்படுத்தல் ஊடரங்கு சட்டம் முடிவுக்கு வருவது தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட தகவல்
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தின் முதல் பத்து நாட்களிற்கு மாத்திரம் குறைந்த வருமானம் பெறுபவர்களிற்கு 2000 ரூபாய் வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
மேலும்,தனிமைப்படுத்தல் ஊரடங்கு 14 நாட்களிற்கு நீடிக்கப்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நீடிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கின் போது 5000 ரூபாய் வழங்கப்பட்டது. எனினும் இம்முறை 10 நாட்களிற்கு இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இரண்டாயிரம் ரூபாய் போதுமானதல்ல என்பதை ஏற்றுக்கொண்டுள்ளதுடன், எனினும் ஆகக்குறைந்தது இரண்டாயிரம் ரூபாயை வழங்குவதை பாராட்ட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தற்போது நிதி நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள போதிலும் மக்களின் நலன்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டியுள்ளது என தெரிவித்துள்ளார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

குணசேகரன் தலைமையிலேயே பார்கவி-தர்ஷன் திருமணத்தை நடத்தும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது தெறி எபிசோட் புரொமோ Cineulagam

மீனாவிற்கு பிரச்சனை கொடுக்க நினைத்து வம்பில் சிக்கிய ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
