எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் மூழ்கியுள்ள கொள்கலன்கள் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலை, இலங்கை அரசாங்கமே நாட்டுக்கு கொண்டு வந்து மூழ்கடித்ததைப் போன்று சிலர் கருத்துக்களை வெளியிட்டு வருவதாக அரசாங்க அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
துறைமுகங்கள் துறை அமைச்சர் ரோஹித அபேவர்தன (Rohitha Abeywardena) இந்த கருத்தை இன்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்துபவர்கள் அரசியல் ரீதியாக இந்த விடயத்தை முன்கொண்டு செல்வதாக அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த கப்பல் மூழ்கிய சம்பவம் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.முதல் கட்டமாக மீனவர்களுக்கு நட்ட ஈடுகள் வழங்கப்பட்டுள்ளன.
தற்போது இரண்டாம் கட்ட நட்ட ஈடுகளை கப்பல் நிறுவனத்திடம் இருந்து பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பெரும்பாலும் இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் மூழ்கியுள்ள கப்பலில் உள்ள கொள்கலன்கள் அனைத்தும் அகற்றப்படுவதற்கான செயற்பாடுகளை கப்பல் நிறுவனம் மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.




