தேங்காய் எண்ணெய் தொடர்பில் வெளியான தகவல்
இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெயின் தரத்தில் எவ்வித பிரச்சினையும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்னை அபிவிருத்திச் சபை தலைவர் கீர்த்தி வீரசிங்க(Keerthi Weerasinghe) இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை,தேங்காய் எண்ணெயுடன் பாம் எண்ணெயை கலப்படம் செய்து பல வர்த்தகர்கள் மோசடியில் ஈடுபட முயற்சிப்பதாக நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் குற்றச்சாட்டொன்றினையும் முன்வைத்துள்ளது.
பாம் எண்ணெய்க்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி வரியை குறைத்து அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட வர்த்தகர்கள் முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தேங்காய் எண்ணெயுடன் பாம் எண்ணெய் கலக்கப்படுவதால் பெரும்பாலான நுகர்வோர் கடுமையான பிரச்சினையை எதிர்கொள்கின்றனர் என்றும் கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
தலையில் துண்டு.. தலைமறைவான குணசேகரன்! சொத்து பற்றிய உண்மையை போட்டுடைத்த ஜனனி! எதிர்நீச்சல் 2 ப்ரோமோ Cineulagam