மக்கள் குழுமும் நிகழ்வுகளை நடாத்துவது தொடர்பில் வெளியான தகவல்
போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் போன்ற மக்கள் குழுமும் நிகழ்வுகள் நடாத்துவதற்கு இது பொருத்தமான தருணமல்ல என பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
போராட்டங்கள் மற்றும் மக்கள் அணி திரளும் சம்பவங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக பரிந்துரைகள் கோரப்பட்டால் அதனை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்பொழுது நிலவி வரும் சூழ்நிலையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தீவிர தாக்கமுடைய கோவிட் திரிபுகள் பரவி வரும் நிலையில் மக்கள் ஒன்று கூடுதல் போராட்டங்கள் நடாத்துதல் ஏற்புடையதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமை ஆரோக்கியமானதல்ல எனவும் கோவிட் பரவுகை ஆபத்தான நிலையில் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இணைய வழி கற்பித்தல் நடவடிக்கைகளை பகிஷ்கரிக்கும் போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதாக ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri