பாகிஸ்தான் பிரதமரின் இலங்கை விஜயம் குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள தகவல்
தாம், இலங்கைப் பயணத்தை எதிர்பார்ப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
தமது பயணம், இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்தும் என்று நம்புவதாக இம்ரான் கான் தமது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இது தொடர்பில் ட்வீட் செய்துள்ளார்,பாகிஸ்தான் பிரதமர் மற்றும் அவரது பிரதிநிதிகள் குழுவை அடுத்த வாரம் வரவேற்க தாம் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விஜயம் இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தும் மற்றும் இரு நாடுகளுக்கும்பரஸ்பரம் பயனளிக்கும் கூட்டு முயற்சிகளுக்கு வழி வகுக்கும் என்று ராஜபக்ஷ ட்வீட் செய்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் 2021 பெப்ரவரி 23-24 திகதிகளில் பாகிஸ்தானிய பிரதமர் இம்ரான் கான் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளார்.
பிரதமர் இம்ரான் கானுடன் வெளியுறவு அமைச்சர் மக்தூம் ஷா மெஹ்மூத் குரேஷி,வர்த்தகத்துறை பிரதமரின் ஆலோசகர் அப்துல் ரசாக் தாவூத், வெளியுறவுத்துறை செயலாளர் சோஹைல் மெஹ்மூத் மற்றும் பாகிஸ்தான் அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகள்ஆகியோர் இலங்கைப் பயணத்தில் பங்கேற்கின்றனர்.





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 14 மணி நேரம் முன்

அண்ணா சீரியலில் நடிக்க ஒரு நாளைக்கு மிர்ச்சி செந்தில் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
