உலகின் பணக்கார யாசகர் தொடர்பில் வெளியான தகவல்
உலகின் பெரும் நிதி மற்றும் சொத்துக்களுடன் மும்பாய் நகரில் வாழும் பணக்கார யாசகர் தொடர்பில் இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
மும்பையைச் சேர்ந்த பாரத் ஜெயின் என்பவர் உலகின் பணக்கார யாசகர் என்றும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், குறித்த யாசகரின் நிகர சொத்து மதிப்பு 7.5 கோடி இந்திய ரூபாய் எனவும் (சுமார் 28 கோடி இலங்கை ரூபாய்) என்றும், மாத வருமானம் இந்திய மதிப்பில் 60,000 முதல் 75,000 ரூபாய் வரை (சுமார் 2 லட்சம் இலங்கை ரூபாய்) என்றும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நபருக்கு 1.2 கோடி ரூபாய் பெறுமதியான அடுக்குமாடி குடியிருப்பும், மாதாந்தம் 30000 இந்திய ரூபாய் வாடகை பெறும் அளவில் இரண்டு வர்த்தக நிலையங்களும் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
குறித்த நபர் ஒரு நாளைக்கு 10-12 மணி நேரம் யாசகம் பெற்று 2000 முதல் 2500 இந்திய ரூபாய் வரை சம்பாதிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
you my like this video