இந்தியாவில் புதிய அரசாங்கம் குறித்து சந்திரபாபு நாயுடுவின் நிலைப்பாடு
பாரதீய ஜனதாக் கூட்டணியில் தாம் தொடர்ந்தும் அங்கம் வகிப்பதாகவும் அந்தக்கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்துக்காக டெல்லிக்கு செல்வதாகவும் ஆந்திர பிரதேஸின் எதிர்கால முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தெலுங்கு தேசம் கட்சி மாநிலங்கள் அவை தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில், இன்று (06.05.2024) ஆந்திராவில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.
மக்களவை
இந்தியா கூட்டணியில் இருந்து ஆட்சியமைப்பது தொடர்பில் எவரும் தம்முடன் பேசவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் சந்திரபாபு நாயுடுவை பொறுத்தவரையில், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்பதே முதன்மை கோரிக்கையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவர் மக்களவை சபாநாயகர் பதவியை தமது கட்சிக்கு கோரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதேநேரம் இந்த விடயத்தில் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைக்கப்படுவதற்கு முன்னரே உடன்பாடுகள் எட்டப்பட்டதா என்பது குறித்த தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.
இதற்கு மத்தியில் மத்திய அரசாங்கத்தின் ஆட்சிக்கு முக்கியமாக தேவைப்படும் மற்றுமொருவரான பீஹாரின் முதலமைச்சர் நிதிஸ்குமாரும் டில்லிக்கு சென்றுள்ளார்.
கட்சித்தாவல்
எனினும் நிதிஸ்குமாரின் கோரிக்கை அல்லது தேர்தலுக்கு முன்னைய உடன்பாடு குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.
முன்னதாக அவரும் மக்களவை சபாநாயகர் பதவியை கோரலாம் என்று எதிர்வுகூரப்பட்டிருந்தது. குறிப்பாக இரண்டு கட்சிகளும் சபாநாயகர் பதவியை கோருவதற்கு பின்னணியில் வலுவான காரணம் இருப்பதாக கூறப்படுகிறது.
தங்கள் மீது கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை பாய்வதை தடுக்கவே சபாநாயகர் பதவியை இந்தக்கட்சிகள் கோருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
சத்தியபிரமாணம்
எதிர்வரும் 5 ஆண்டுகளில் ஒருவேளை காங்கிரசுக்கு ஆதரவளிக்க இந்த கட்சிகள் முயலும் பட்சத்தில், சபாநாயகர் இவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, தகுதி நீக்கம் செய்ய வாய்ப்பிருக்கிறது.
எனவே சபாநாயகர் பதவி தங்களிடம் இருந்தால் இதற்கான வாய்ப்பு இருக்காது.
அத்துடன் சபாநாயகர் பதவி நாடாளுமன்றத்தில் அதிகாரமிக்க பதவி என்பதால் இதற்கான கோரல் தீவிரமடைந்திருக்கிறது
இதற்கிடையில் மத்தியில் பெரும்பாலும் பாரதிய ஜனதாவின் ஆட்சி அமையும் என்ற அடிப்படையில் இன்று முதல் எதிர்வரும் 9ஆம் திகதிவரை ராஸ்ட்ரபவன் பொதுமக்களுக்காக மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
பிரதமர் மற்றும் அமைச்சரவை சத்தியபிரமாண ஆயத்தங்களுக்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
எனவே பெரும்பாலும் எதிர்வரும் 8ஆம் திகதியன்று பிரதமர் மற்றும் அமைச்சரவை சத்தியபிரமாண நிகழ்வு இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |