வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட கணக்குகள் குறித்து பொலிஸார் வெளியிட்ட எச்சரிக்கை
இலங்கையில் அதிகரித்து வரும் இணைய மோசடிகளுக்கு மத்தியில், மோசடிகளில் ஈடுபடுபவர்கள் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட கணக்குகளில் மட்டுமே ஊடுருவல் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் வங்கி அமைப்புகள் அல்லது நிதி நிறுவனங்களின் கணக்குகளில் ஊடுருவல் செய்த சம்பவங்கள் இலங்கையில் அல்லது உலகில் எங்கும் பதிவாகவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ இது தொடர்பில் வெளியிட்டுள்ள தகவலில், பலரின் தனிப்பட்ட கணக்குகளில் ஊடுருவல் செய்து, பல மில்லியன் ரூபாய்கள் மோசடி செய்யப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
நிதி இழப்புக்கள்
முன்னணி தனியார் வங்கியொன்றின் தனிப்பட்ட கணக்கு அண்மையில் ஊடுருவப்பட்டு சுமார் 80 மில்லியன் ரூபாய்கள் மோசடி செய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

வங்கிக் கணக்குகளை வைத்திருப்பவர்கள் தங்கள் பொறுப்பற்ற நடத்தை மற்றும் அலட்சியத்தால் இந்த மோசடிகளில் சிக்கிக் கொள்கிறார்கள்.
இந்தநிலையில்; மோசடியால் சிக்கிக்கொள்ளும் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஏற்படும் நிதி இழப்புகளின்போது, வங்கிகளுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை என்றும் தல்துவ தெரிவித்துள்ளார்.
வாராந்தர அமைச்சரவை மாநாடு
வாராந்தர அமைச்சரவை மாநாட்டில் நேற்று பங்கேற்ற அவர், கைப்பேசிகள் மற்றும் 250 மடிக்கணணிகளை கைப்பற்றி சீனர்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்களும் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மோசடி செய்பவர்கள் விருந்தகங்களில் மற்றும் வீடுகளில் தங்கியிருந்ததாக கூறிய அவர், தங்களுடைய வளாகத்தை வாடகைக்கு விடுபவர்கள் தங்கள் வளாகங்களில் மோசடிகள் நடப்பதை அறிந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்
இந்த மோசடி செய்பவர்கள் வெளிநாட்டு மற்றும் உள்ளூர் கணக்குகளில் ஊடுருவி கிரிப்டோ கரன்சியாக இலட்சக்கணக்கில் பணத்தை ஏமாற்றுகிறார்கள் என்று பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 12 மணி நேரம் முன்
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
பதறி அடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்து தாரா சொன்ன விஷயம், அதிர்ச்சியில் நந்தினி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam