ஒரு மணி நேரத்திற்கு 6,700 டொலர் கட்டணம்! - மகிந்த சென்ற விமானம் தொடர்பில் வெளியான தகவல்
பிரதமர் மகிந்த ராஜபக்ச திருப்பதிக்கு பயணம் மேற்கொண்ட தனியார் விமானம் இத்தாலியின் சென் மெரினோ என்ற குறைந்த சனத்தொகையை தீவு ஒன்றியிலேயே பதிவுசெய்யப்பட்டிருப்பதாக சோலிஷ முன்னிலை கட்சி தெரிவித்திருக்கின்றது.
அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் புபுது ஜாகொட இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர் ,
சென் மெரினோ என்ற இடம் சட்ட விரோதமாக ஈட்டப்படும் கருப்பு பணத்தை சட்டபூர்மாக மாற்ற பயன்படுத்தப்படும் ஒரு இடமாக கருதப்படுகின்றது. எனவே இந்த விமானம் கருப்பு பணம் சம்பந்தப்பட்ட ஒருவரின் விமானமாக இருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடு டொலர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமரின் இந்த செயற்பாட்டை கண்டிக்கத்தக்கது. இந்த விமானம் கடந்த 23ம் திகதி உகாண்டாவில் இருந்து இரத்மாலான விமான நிலையத்திற்கு வந்துள்ளது.
அத்துடன், இந்த விமான பயணத்திற்காக மணித்தியாலம் ஒன்றுக்கு 6,700 டொலர்கள் அறவிடப்படுகின்றன. எனவே 24 மணித்தியாலங்கள் இந்த விமான சேவை பயன்படுத்தப்பட்டிருந்தால் சுமார் 32 மில்லியன் ரூபா விமான நிறுவனத்தினால் அறவிடப்பட்டிருக்கும்.
குறித்த விமானத்திற்கு நண்பர்களே அனுசரனை வழங்கியதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்த போதும் நாட்டின் தற்போதைய நிலையில் இவ்வளவு பாரிய தொகை டொலர்கள் வீணடிக்கப்பட்டமை கண்டிக்கதக்கது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி....
மகிந்த பயணித்த விமானம் யாருடையது? திருப்பதி விஜயத்தால் ஏற்பட்டுள்ள சர்ச்சை
You My Like This Video

பாகிஸ்தான் ராணுவ தளங்களை தாக்கிய இந்திய விமானப்படை: BrahMos பயன்படுத்தப்பட்டிருக்க வாய்ப்பு News Lankasri

இனியா செய்த விஷயம்.. ஷாக் ஆன வில்லன்! நம்பர் 1 ட்ரெண்டிங்கில் பாக்கியலட்சுமி அடுத்த வார ப்ரோமோ Cineulagam

இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ள சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பிரபலம்.. எங்கெல்லாம் சென்றுள்ளார் பாருங்க Cineulagam
