மத்திய கிழக்கு போர் இலங்கையில் ஏற்படுத்தும் தாக்கம்! மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்
இலங்கையின் பணவீக்க விகிதம் அடுத்த மாதமளவில் 9 சதவீதம் அல்லது அதற்கு அண்மித்த மட்டத்திற்கு உயரக்கூடும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் எதிர்பார்த்ததை விட நீண்டகாலம் தொடர்வதும், அதன் காரணமாக சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் உயர்ந்த மட்டத்தில் காணப்படுவதும் பணவீக்கம் அதிகரிப்பதற்குக் காரணமாக அமைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிலவும் போர் சூழல்
கடந்த மாத இறுதியில் இலங்கையின் பணவீக்க விகிதம் 8.3 சதவீதமாகப் பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
2026 மே மாதத்தில் வட்டி விகிதங்களை அதிகரிக்கத் தீர்மானித்தபோது, பணவீக்கம் 7 முதல் 8 சதவீதம் வரை உயர்ந்து பின்னர் குறைவடையும் என எதிர்பார்க்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் எதிர்பார்த்ததை விட நீண்டகாலம் நீடிப்பதால், முன்னர் கணிக்கப்பட்ட நிலைமைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பணவீக்கத்தை விரைவில் இலக்கான 5 சதவீத மட்டத்திற்குக் கொண்டுவருவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், அதிகரிக்கும் பணவீக்கம் நாட்டின் பொருளாதாரத்திலும் மக்களின் வாழ்க்கைத் தரத்திலும் கொள்வனவுத் திறனிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.
கனடாவின் Most Wanted பட்டியலில் முதலிடம் - கோல்டி பிராரை பிடிக்க ரூ.1.6 கோடி பரிசு அறிவிப்பு News Lankasri
குக் வித் கோமாளி புகழ் அஷ்வினுக்கு நாளை (நவம்பர் 20) திருமணம்... பெண், பிரபல இயக்குனரின் பேத்தி... Cineulagam