ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய இளைஞனுக்கு அடித்த அதிஷ்டம்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்ட அதிஷ்ட இலாபச் சீட்டிழுப்பில் இந்தியாவை சேர்ந்த அனில்குமார் பொல்லா என்ற 29 வயது இளைஞன் 240 கோடி இந்திய ரூபாய்களை வென்றுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் ஏற்றுமதி தொழில் செய்து வரும் அவர், 23ஆவது அதிஷ்ட நாள் குலுக்கலில் ஏழு வெற்றி எண்களும் பொருந்தியதால் முழு பரிசுத் தொகையையும் யாருடனும் பகிராமல் தனியாக வென்றுள்ளார்.
அதிஷ்ட இலாபச் சீட்டு குழுவிடமிருந்து அழைப்பு வந்த போது, தான் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்ததாக அனில்குமார் தெரிவித்துள்ளார்.
88 இலட்சம் போட்டியாளர்கள்
அதிஷ்ட இலாபச் சீட்டிழுப்பில் வெல்வது தனது நீண்ட நாள் கனவு எனவும் இதனை நம்ப முடியாது மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மொத்தம் 88 இலட்சம் போட்டியாளர்களில் அனில்குமார் பொல்லா ஒரு வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |