அமெரிக்க பாதுகாப்புத்துறை உயர் பதவிக்கு இந்திய வம்சாவளி பெண்ணின் பெயர் பரிந்துரை
அமெரிக்க பாதுகாப்புத்துறை உயர் பதவிக்கு இந்திய வம்சாவளி பெண் ராதா ஐயங்கார் பிளம்ப்பின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க பாதுகாப்பு விவகாரங்களை கண்காணிக்கும் பென்டகனில் முக்கிய பதவிகளுக்கு ஐந்து பேரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார்.
இதற்கமைய, பாதுகாப்புத் துறையில் நீண்ட அனுபவம் கொண்ட ராதா ஐயங்கார் பிளம்ப்பின் பெயர் பாதுகாப்பு துணை செயலாளர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ராதா ஐயங்காரின் பதவி நிலை
ராதா ஐயங்கார் தற்போது பாதுகாப்பு துணைச் செயலாளராகவும், தலைமைத் தளபதியாகவும் உள்ள நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராதா ஐயங்கார் பிளம்பை பென்டகன் பதவிக்கு பரிந்துரைத்துள்ளார்.
இவர் அமெரிக்க பாதுகாப்புத் துறை, எரிசக்தித் துறை மற்றும் வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஆகியவற்றில் தேசிய பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்த பல மூத்த பதவிகளை வகித்துள்ளார்.