அமெரிக்காவில் மனைவி - மகனை படுகொலை செய்த இந்தியர்
அமெரிக்காவில் இந்தியா வம்சாவளியை சேர்ந்த ஒருவர் தனது வீட்டில் மனைவி மற்றும் மகனை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர், தானும்(கணவர்) துப்பாக்கியால் சுட்டு தவறான முடிவை மேற்கொண்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவின் கர்நாடக பகுதியை சேர்ந்தவர் ஹர்ஷ்வர்தன் கிகாரி (வயது 57) அவரது மனைவி சுவேதா பன்யம் (வயது 44) மற்றும் மகன் ஆகியோரே இவ்வாறு பலியாகியுள்ளனர்.
அமெரிக்கா
அமெரிக்காவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியாற்றினார். பின்னர், 2017ம் ஆண்டு ஹர்ஷ்வர்தன் மனைவியுடன் சேர்ந்து ஹாலோ வால்ட் என்ற ரோபோர்ட்டிக் நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார்.
ஹர்ஷ்வர்தன் குடும்பத்துடன் நியூகேஸ்டல் பகுதியில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 24ம் திகதி ஹர்ஷ்வர்தன் தனது வீட்டில் மனைவி சுவேதா மற்றும் மகனை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கி சூடு
ஒரு மகன் வெளியே சென்றிருந்த நிலையில் மற்றொரு மகனையும், மனைவியையும் ஹர்ஷ்வர்தன் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அந்நாட்டு பொலிஸார், 3 பேரின் உடல்களையும் பெற்று பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.





ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 12 மணி நேரம் முன்

பாரிய முதலீடுகளால் இன்னொரு ஏழை நாட்டிற்கு வலை விரித்த சீனா... முதற்கட்டமாக ரூ 3,000 கோடி News Lankasri

சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri
