இலங்கை வரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பயணத் திட்டம்
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கையில் தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்திற்கு பயணம் மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி ஏப்ரல் 4 முதல் 6 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார். அப்போது அவர் அநுராதபுரத்துக்கும் பயணிக்கவுள்ளார்.
இந்தியாவுடன் ஆழமான தொடர்பு
அநுராதபுரம் கடந்த காலத்தில் இலங்கையின் தலைநகராக இருந்த இடமாகும். இந்தியாவுடன் ஆழமான தொடர்பைக் கொண்டிருந்தது.
இந்தநிலையில், பிரதமர் நரேந்திர மோடி ராமேஸ்வரத்தில் அருள்மிகு ராமநாதசுவாமி கோயிலில் பிரார்த்தனை செய்து புதிய பாம்பன் பாலத்தைத் திறந்து வைக்கவுள்ளார்.
மகத்தான மத முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்தக் கோயில், பன்னிரண்டு ஜோதிலிங்க கோயில்களில் ஒன்றாகும்.
மோடியின் ஆட்சியின் கீழ், இலங்கை மற்றும் தமிழ்நாடு ஆகியவை ஒன்றுக்கொன்று பெருகிய முறையில் இணைக்கப்பட்டுள்ளன.
அண்மைய ஆண்டுகளில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக, தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையே படகு சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.
அத்துடன் சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு நேரடி விமானங்களும் சேவையில் ஈடுபட்டு வருகின்றன இதற்கிடையில், பாக்கு நீரிணையின் குறுக்கே தமிழ்நாட்டின் தனுஸ்கோடிக்கும் இலங்கையின் தலைமன்னார்க்கும் இடையில் சுமார் 23 கிலோமீற்றர் நீளமுள்ள தரைப் பாலம் கட்டுவது பரிசீலனையில் உள்ள ஒரு இலட்சியத் திட்டமாக உள்ளது.
2002 ஆம் ஆண்டு இலங்கையால் முதன்முதலில் முன்மொழியப்பட்டது, ஆனால் 2023 ஆம் ஆண்டு அப்போதைய இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்திய வருகையின் போது இரு நாடுகளும் சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்ள ஒப்புக்கொண்டபோது இந்த யோசனை மீண்டும் பிரபலமடைந்தது.
இதேவேளை புதிய இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் ஆட்சியில் இலங்கைக்கு செல்லும் முதல் வெளிநாட்டுத் தலைவர் பிரதமர் மோடி ஆவார்.
2014 இல் பதவியேற்றதிலிருந்து பிரதமர் மோடி இலங்கைக்கு மேற்கொள்ளும் நான்காவது பயணம் இதுவாகும், இதற்கு முன்னர் 2015, 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் அவர் இலங்கைக்கு பயணித்துள்ளார் பிரதமர் தாய்லாந்திலிருந்தே இலங்கைக்கு பயணம் மேற்கொள்வார், அங்கு அவர் பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வார் என்று இந்திய செய்தித்தாள் ஒன்று கூறுகிறது.